Friday 11 July 2014

விவேகனந்தர் கீதை பற்றி


       


கீதை என்று சொல்லப்படும் நூல் மகாபாரதத்தின் ஒரு சிறு பகுதியாகும். கீதையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்குப் பல விபரங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முதலாவதாக அது மகாபாரத்தின் ஒரு பகுதிதானா ? அதாவது அதனை எழுதிய ஆசிரியர் வேத வியாசர் என்று சொல்லப்படுவது உண்மைதானா ? அல்லது அந்த மகா காவியத்தினுள் அது இதைச் செருகலாக  நுழைக்கப் பட்டதா ? இரண்டாவதாக கிருஷ்ணன் என்று பெயரில் வரலாற்றில் யாராவது உண்டா ? மூன்றாவதாக கீதையில் குறிப்பிடப்படுவது போல் மகாபாரதப் போர் (குருசேத்திரப் போர்) என்ற மாபெரும் போர் உண்மையில் நடை பெற்றதா ? நான்காவதாக அர்ஜுனனும் பிறரும் உண்மையான வரலாற்று நபர்களா ?
கீதை மகா பாரதத்தின் பகுதியா --
       முதலில் இத்தகைய கேள்விகள் எழுவதற்கு என்ன அடிப்படை என்பதைப் பார்ப்போம். வேத வியாசர் என்ற பெயரில் பலர் இருப்பதை நாமறிவோம். அவர்களுள் கீதையை எழுதிய உண்மையான ஆசிரியர் யார் ? பத்ராயனார் வியாசரா ? துவைபாயன வியாசரா ? வியாசர் என்பது ஒரு பட்டம் (title) தான் (அது ஒருவருடைய பெயர் அல்ல) விக்கரமாதித்தன் என்ற சொல் ஒரு பொதுவான பெயராக இருப்பதைப்போல ஒரு புதிய புராணத்தை இயற்றுகிற யாரும் வியாசர் என்ற பெயரால் அழைக்கப்படுவதுண்டு.
       












இன்னொரு விஷயம் என்னவென்றால் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) கீதைக்கு மகா பாஷ்யம் (விளக்க வுரை) எழுதிப் பிரபலப் படுத்துவதற்கு முன்பு வரை கீதை என்ற நூல் பொது மக்களால் அதிகம் அறிந்திருக்கப் படவில்லை. அதற்கு வெகு காலத்திற்கு முன்பே போதாயனர் என்பவர் கீதைக்கு உரை எழுதியிருந்தார் என்று பலர் கூறுகிறார்கள். இந்தக் கூற்று நிருபிக்கப் படுமானால். கீதையின் பழமை குறித்தும் வியாசர் அதன் ஆசிரியர் என்பது குறித்தும் ஐயத்திற்கு இடம் இல்லாமல் போகும்.
       வேதாந்த சூத்திரத்திர்க்குப் போதாயனர் பாஷ்யம் எழுதினார். அந்த பாஷ்யத்திலிருந்து இராமானுஞ்சர் அவருடைய ஸ்ரீ – பாஷ்யத்தைத் தொகுத்தார். அதன் சில பகுதிகளைச் சங்கரச்சாரியார் தமது (கீதை) விளக்கவுரையில் இங்கும் அங்குமாக எடுத்தாள்கிறார். அந்த விளக்க உரையைச் சுவாமி தயானந்தர் மிக விரிவாக விவாதித்திருக்கிறார். ஆனால் இந்தியா முழுவதும் சுற்றுப் ஓயணம் மேற்கொண்ட போது போதாயனரின் பாஷ்யதிலிருந்து ஒரு பிரதியைக் கூட நான் காண முடியவில்லை. இராமானுஜர் கூட தற்செயலாகக் காண நேர்ந்தது செல்லரித்த ஒரு சுவடியிலிருந்து தான் அவருடைய பாஷ்யத்தைத் தொகுத்தார் என்று சொல்லப்படுகிறது. வேதாந்த சூத்திரத்திற்கு போதாயனர் எழுதிய பாஷ்யம் என்பது இவ்வளவுக்கு இருளில் மூழ்கி உறுதியற்றுக் கிடக்கிறபோது கீதைக்கு போதாயனர் எழுதிய பாஷ்யம் ஒன்று இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருப்பது, பயனற்ற வேலையாகும். சிலர் சங்கராச்சாரியார் தான் கீதையின் ஆசிரியர் என்று முடிவு செய்கிறார்கள் அவரே அதை மகாபாரததில் சேர்த்தவர் என்று சொல்லுகிறார்கள்.

















கிருஷ்ணன் பற்றி --
       இரண்டாவது கேள்வியை பொறுத்தவரை கிருஷ்ணன் என்ற நபர் இருந்திருப்பார் என்பது மிகுந்த சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. சாந்தோக்கிய உப நிசத்தில் ஓர் இடத்தில் கிருஷ்ணன் குறிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் காணலாம். கிருஷ்ணன் தேவகியின் மகன் என்றும் கோரா என்ற யோகியிடம் இருந்து ஆன்மீக போதனையைப் பெற்றார் என்றும் அந்தக் குறிப்பில் காணப் படுகிறது.
       மகாபாரதத்தில் துவாரகையின் அரசனாகக் கிருஷ்ணன் காட்டப்படுகிறான். விஷ்ணு புராணத்தில் கோபியருடன் கிருஷ்ணன் கூடி விளையாடுவது பற்றிய வர்ணனையை நாம் காண்கிறோம். பாகவதத்தில் அவனுடைய ராசலீலையை ( இன்ப விளையாட்டு ) பற்றிய வருணனை மிக விரிவாகச் சொல்லப்படுகிறது. மிகப் பழங்காலத்தில் நமது நாட்டில் மதநோற்சவம் ( காமக் கடவுளாகிய மன்மதனுக்கு நடத்து திருவிழா ) நடை பெறுவது வழக்கம் இருந்தது. அதுதான் கிருஷ்ணன் மீது திணிக்கப்பட்டது.
       வரலாற்று ஆராய்ச்சியின் மூலம் உண்மையைக் கண்டுபிடிக்கும் மனப்பான்மை பழங்காலத்தில் நமது நாட்டில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆகையால் ஆதரங்களும் சரியான விவரங்களும் இல்லாமல் ஒருவர் தான் சரி என்று நினைத்தை எப்படி சொல்ல முடிந்தது. மற்றொரு விஷயம் என்ன வென்றால் பழங்காலத்தில் மனிதர்களிடம் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படுகிற இயல்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஆகையால் ஒருவர் ஒரு நூலை எழுதி அவருடைய குருவின் பெயராலோ, அல்லது வேறு ஒருவரின் பெயராலோ வெளியிடுவது என்பது அடிக்கடி நிகழ்ந்தது. இத்தகைய செயல்கள் வரலாற்றுக்  குறிப்புகளைக் கொண்டு உண்மையைத் தேடிக் கண்டு பிடிக்க முயற்சிக்கின்ற ஆய்வாளர்களுக்கு மிகுந்த தொல்லையைத் தருகின்றது.
      
















பழங்காலத்து மனிதர்களுக்கு பூகோள அறிவு கிடையாது. அதனால் மனம் போனபோக்கில் கற்பனையை ( உ – பூமியை இரண்யாட்சன் என்ற அரக்கனிடம் இருந்து விஷ்ணு பன்றியாக மாறி கடலுக்குள் இருந்து எடுத்து வந்ததாக கூறப்படும் கதைகள் போல் ) அதனால் தான் இனிப்புக் கடல், பாற்கடல், தயிர்க்கடல், வெண்ணெய்க் கடல் ( பாற்கடலில் விஷ்னு பாம்பின் மீது படுத்து இருப்பதாக புனையப்பட்ட கதைகள் ) என்று அசாதாரண மானவையும், வேடிக்கையானவையும் ஆகிய கற்பனைப் படைப்புகளை நாம் காண்கிறோம். புராணங்களில் ஒருவன் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் இன்னொருவன் நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் நாம் பார்க்கிறோம். ஆனால் வேதங்கள் மனிதன் நூற்றாண்டுகள் வாழ்கிறான் என்று சொல்லுகின்றன. நாம் யார் சொல்வதை ஏற்பது ? ( வேதம் சொல்வது சரியா அல்லது புராணங்கள் சொல்வது சரியா ) கிருஷ்ணன் விஷயத்தில் தெளிவான ஒரு முடிவை மேற்கொள்வது என்பது முடியாது.
       இங்கு வேறொரு விஷயமும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். அதாவது யார் வேண்டுமானாலும் கீதையின் ஆசிரியராக இருந்து விட்டுப் போகட்டும், மகாபாரதம் முழுவதிலும் நாம் காணுகிற போதனை களையே கீதையிலும் நாம் காண முடிகிறது என்பது உண்மை. இதிலிருந்து மகா பாரத காலத்தில் யாரோ ஒரு பெரிய மனிதர் தோன்றி இந்தப் புதிய போர்வையில் அன்றையச் சமுதயத்திற்குப் பிரம ஞானத்தைப் போதித்திருப்பார் என்று தெளிவுக்கு நாம் வர முடியும். வேறொரு உண்மை நம் முன் வருகிறது. அதாவது பழங்காலத்தில் ஒரு பிரிவிற்கு பிறகு வேறொரு பிரிவு எனத் தோன்றும் பொழுது ஒன்று மாறி மற்றொன்றாக அவற்றிக்குரிய புனித நூல்களும் தோன்றுகின்றன. கால ஓட்டத்தில் ஒரு மக்கள் பிரியுவும் அதற்குரிய புனித நூல்களும் ஒரு சேர அழிந்து விடுவதுண்டு அல்லது ஒரு மக்கள் பிரிவு அழிந்த பிறகும் அதற்குரிய புனித நூலில் அழியாமல் நிலைத்து விடுவதுண்டு. கீதை அத்தகைய ஒரு மக்கள் பிரிவுக்கு உரிய புனித நூலாக இருக்கலாம்.
மகாபாரதப் போர் ---
       


















இபொழுது மூன்றாவது கேள்விக்கு வருவோம். குருசேத்திரப் போர் நடை பெற்றது என்பதற்கு ஆதரவாகத் குறிப்பிடத்தக்க ஆதாரம் எதுவும் இல்லை. கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர் நடந்தது என்பதில் ஐயப்பட ஏதும் இல்லை. இன்னொரு விஷயம் போர்க்களத்தில் இரு தரப்புப் படையினர் ஒருவரை ஒருவர் மோதிப் போர் செய்வதற்கு உரிய இறுதிக் கட்டளையை எதிர்பார்த்துக் நின்று கொண்டு இருந்த போது ஞானம், பக்தி, யோகம் ஆகியவை பற்றி விரிவான விவாதம் எப்படி நடை பெற்று இருக்கமுடியும். கூச்சலும், குழப்பமும் நிறைந்த போர்க்களத்தில் கிருஷ்ணனும், அர்ச்சுனனும் பேசிய ஒவ்வொரு சொல்லையும் குறிப் பெடுத்துக் கொள்ள அங்கே சுருக் எழுத்தாளர் யாரவது இருந்தார்களா ? இந்தக் குருசேத்திரப் போர் என்பது ஓர் உருவாக கதை என்று சிலர் கருதுகிறார்கள்.


















வரலாற்று மனிதர்களா ---
       இனி நான்காவது விஷயத்தை பொறுத்தவரை அர்ச்சுனனும் மற்றவர்களும் வரலாற்று மாந்தர்களா என்பது பற்றி அய்யப்படுவதற்கு போதுமான அடிப்படை இருக்கிறது. சதபத பிரமாணம் என்பது ஒரு மிகப் பழமையான நூல் அந்த நூலின் சில இடங்களில் அஸ்வமேத யாகம் சேத அனைவருடைய பெயர்களும் குறிப்பிடப் பட்டு உள்ளன. ஆனால் அந்த இடங்களில் அர்ச்சுனனுடைய பேரனும் பரீக்ஷித் மகா ராஜாவின் மகனுமாகிய ஜனமேஜயன் பெயர் குறிப்பிடப் பட்டு உள்ளது. என்றாலும் அர்ச்சுனன் , அவனுடன் சேர்ந்த மற்றவர்கள் எவருடைய பெயரும் குறிப்பிடப் படவில்லை. ஆனால் மகா பாரதத்திலும் வேறு சில நூல்களிலும் யுதிஷ்டிரன் (தர்மன்) அர்ஜுனன் முதலிய சிலர் அசுவமேத யாகம் செய்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
       இது பகவத்கீதை பற்றி விவேகனந்தரின் அரிய ஆய்வுரை. அறம் (தர்மம்) என்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் மென்று நமது எண்ணத்திற்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வரலாற்று செய்திகள் முழுமையாகப் பொய்யானது என்று நிருபிக்கப் பட்டாலும் நமக்கு எந்தவகையிலும் அதனால் இழப்பில்லை. அவ்வாறாயின் இந்தனை வரலாற்று ஆய்வுகளால் என்ன பயன் என நீங்கள் கேட்கலாம். வரலாற்று ஆய்வுகளால் நாம் உண்மைகளை (உண்மையாக நடந்தவைகளை) அறிய முடிகிறது. அது தான் வரலாற்று ஆய்வினால் நாம் பெறுகிற பயன் அறியாமையில் இருந்து பிறக்கின்ற தவறான கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்வது சரியாகாது.
       உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ளத் தக்க வரலாற்று ஆய்வின் சிறப்பினை இந்த நாட்டு மக்கள் மிகக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். பலருக்கு பயன் தரத்தக்க ஒரு கருத்தை போதிப்பதற்காக உண்மை அல்லாத ஒன்றைச் சொல்வதால் கேடு ஒன்றும் நேர்ந்துவிடாது என்று பல மக்கள் பிரிவினர் நம்புகிறார்கள். வேறு வகையில் சொல்வதானால் முடிவு நல்ல தாக இருக்கு மானால் வழி கெட்டதாக இருப்பினும் தவறில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவேதான் நமது தந்திரங்களில் பல “ மகாதேவர் பார்வதிக்கு சொன்னார் “ எனத் தொடங்கு கின்றன. ஆனால் உண்மையை அறிந்து உண்மையை மட்டுமே ஏற்றுக் கொள்வதை நாம் நமது கடமையாகக் கொள்ள வேண்டும். உண்மையை ஆராய்ந்து உணரவேண்டும்.என்ற எண்ணம் இல்லாமல் மூட நம்பிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது நமது தொன்று தொட்ட மரபாக இருந்து வருகிறது. அந்த பழக்கம் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. இயேசு கிறித்து, முகமது நபி போன்ற பெரியவர்களும் கூட அத்தகைய பல மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை உடையவர்களாக் இருந்தனர். அவர்களாலேயே அவற்றை உதறிவிட முடியவில்லை மூடநம்பிக்கைகள் அவ்வளவு வலுவானவை. எப்போதும் உண்மையில் மட்டும் உங்கள் பார்வையை பதிக்க வேண்டும் பிற மூடநம்பிக்கைகள் அனைத்திலிருந்தும் அறவே விலகி விடவேண்டும்.

       இது பகவத் கீதை மற்றும் நம் நம்பிக்கைகள் குறித்து விவேகானந்தரின் ஆய்வுரை கீதைகள் பற்றிய சிந்தனைகள் என்ற நூலில் பக்கம் 1—6 ல் இருந்து எடுத்தது கீதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள அய்யா கீ . வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் படித்து தெரிந்து கொள்ளலாம்.